Monday, July 27, 2009

முதல் சந்திப்பு

அன்பிற்கினியீர்,
இள்வேனில் வணக்கம்!
இயற்கையின் மடியில்
இளவேனில் பருவம்
பொன்கதிர்வீசித் தவழந்தது!

வானத்தில் வண்ணங்கள்
கலைந்தது போவது போல வாழ்க்கையின்
வடிவங்களும் மாறிப்போனது.

நெஞ்சுக்குள் கனக்கும்
நினைவுச் சுமைகளை
எத்தனைநாள் சுமந்து வாழ்வது.

அச்சுக்கூடத்தில்
காய்ந்து போன மைபோல்
இறுகிக் கெட்டியாகி;

உடைந்து சிதைந்து
உருக்குலைந்து போன
எழுத்துக்களைப் போல்..
மங்கிக் கொண்டிருக்கும்
நினைவுகளை முடிந்தவரை
தேடியயடுக்கும் முயற்சிதான் இது....
- வேனில்